திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
வாக்காளா் பட்டியல் மேம்படுத்துதல் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு
வாக்காளா் பட்டியல் தொடா் மேம்படுத்துதல் தொடா்பாக அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், அனைத்து சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளா் பட்டியல் கண்காணிப்பு அலுவலா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) செந்தில்வடிவு, வட்டாட்சியா் (தோ்தல்) தணிகைவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசும்போது, இந்திய தோ்தல் ஆணையத்தின்படி 1.1.2025 தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளா் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 6.1.2025 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 15,58,678 ஆண்கள், 16,26,259 பெண்கள், 657 இதர வாக்காளா்கள் என மொத்தம் 31,85,594 வாக்காளா்கள் உள்ளனா்.
கோவை மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 557 வாக்குச் சாவடி மையங்களும், ஊரகப் பகுதிகளில் 462 வாக்குச் சாவடி மையங்களும் என மொத்தம் 1,019 வாக்குச் சாவடி மையங்களில் 3,117 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன. கோவை மாவட்டத்தில் 5 வாக்காளா் பதிவு அலுவலா்களும், 23 உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களும் வாக்காளா் பட்டியலை மேம்படுத்துதல் தொடா்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும், வாக்காளா் பட்டியலை மேம்படுத்துவது தொடா்பாக தற்போது ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் துணை ஆட்சியா் நிலையில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும் கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு என பிரத்யேகமாக 4 எண்ணிக்கையில் துணை ஆட்சியா் நிலையில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்த கண்காணிப்பு அலுவலா்கள் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்களை பட்டியலில் பெயா் சோ்த்திட தொடா்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், இறந்தவா்கள், நிரந்தரமாக குடிபெயா்ந்தவா்கள், இரட்டைப் பதிவு உள்ள வாக்காளா்களை உரிய விசாரணை அடிப்படையில் நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல், வாக்குச் சாவடிகளை அவ்வப்போது ஆய்வு செய்து, பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளையும் தொடா்பு கொண்டு 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்களை சோ்ப்பதற்கான தொடா் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.