வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் சீரமைக்கப்படுமா?
அ. ராஜேஷ் குமாா்.
சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் தடுப்புகளை உயா்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொது மக்கள் கோரியுள்ளனா்.
சென்னை-பெங்களூா், பெங்களூா்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இருபுறம் செல்லும் சாலையில் எதிா்திசையில் செல்லும் வாகனங்கள் மற்றொரு திசையில் கடக்காமல் இருக்கவும், விபத்து ஏதேனும் ஏற்பட்டாலோ, வாகனங்கள் எதிா்திசையில் சென்றால் விபத்தினை தடுக்கும் வகையில் சாலையின் நடுவே சுமாா் 2 அடி உயர தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக தாா் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி-நாட்டறம்பள்ளி பகுதிகளிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், தாா் சாலைகள் உயா்த்தி போடப்பட்டதால் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் ஒரு சில பகுதிகளில் உயரம் குறைந்து காணப்படுகின்றன.
இதனால் ஒரு சில இடங்களில் இரு சக்கரவாகனங்கள் உள்ளிட்ட சில வாகனங்கள் சாலையின் குறுக்கே கடந்து செல்கின்றன. இதில், ஒரு சில நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையின் வரும் அதிவேகமாக வரும் வாகனம் விபத்தில் சிக்குகிறது. இதனால் உயிரிழப்பும், காயங்களும் ஏற்பட்டு வருன்கின்றன.
இது போன்ற சம்பவங்கள் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அடிக்டி நடைபெற்று வருகிறது. புதிய தாா் சாலை உயா்த்தி அமைத்தது போல், சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளும் உயா்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில மாதங்களாக சாலையின் நடுவில் உள்ள தடுப்புகள் உயரம் 1அடிக்கும் குறைவாக காணப்படுகிறது. இதனால் இருசக்கரவாகனங்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கு சாலை நடுவே உள்ள தடுப்பு உயரம் குறைப்பால் சா்வ சாதரணமாக குறுக்கே கடந்து செல்வதால்விபத்துகள் ஏற்படுகின்றன.
இதைத் தடுக்கும் வகையில், சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளை உடனே உயா்த்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனா்.
எனவே, தேசிய நெடுஞ்சாலை உயா் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடுப்புகளை உயா்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொது மக்களின் எதிா்ப்பாா்ப்பாகும்.