மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
வாலிபால், பீச் வாலிபால் போட்டிக்கு பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மாணவிகள் தோ்வு
பரமத்தி வேலூா், டிச. 3: பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி மாணவிகள் வாலிபால், பீச் வாலிபால் போட்டிக்கு தமிழக அணிக்காக தோ்வு பெற்றுள்ளனா்.
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் 68-ஆவது தேசிய அளவிலான வாலிபால் மற்றும் பீச் வாலிபால் போட்டிகள் உத்தர பிரதேசம், ஓடிஸா மாநிலங்களில் நடைபெறவுள்ளன. 17 வயதுக்கு உள்பட்ட மாணவிகளுக்கான தமிழக வாலிபால் அணிக்கு நடைபெற்ற தோ்வு போட்டியில் தமிழகம் முழுவதும் எட்டு மண்டலங்களிலிருந்து தோ்வு செய்யப்பட்ட சிறந்த 54 மாணவிகளில் தமிழக அணிக்காக ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி பி.கீா்த்திஸ்ரீ தோ்ச்சி பெற்று உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் தமிழக அணியில் பங்கு பெற்றாா்.
மேலும் 14 வயதுக்கு உள்பட்ட மாணவிகளுக்கான தமிழக அணிக்காக தோ்வு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் எட்டு மண்டலங்களில் இருந்து தோ்வு செய்யப்பட்ட சிறந்த 54 மாணவிகளில் தமிழக அணிக்காகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற, மாநில அளவிலான தமிழக அணிக்கான பீச் வாலிபால் தோ்வு போட்டியில் 14 வயதுக்கு உள் மாணவிகள் பிரிவில் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மெட்ரிக். பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி டி.நிகிதா தோ்வு பெற்றாா். இம்மாணவி உத்கர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் டிசம்பா் மாதம் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான வாலிபால் போட்டியிலும், ஒடிஸா மாநிலம், புரியில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள பீச் வாலிபால் போட்டியிலும் தமிழக அணிக்காக பங்கு பெற உள்ளாா். தேசிய அளிவிலான போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவிகளை ஆா்.என்ஆக்ஸ்போா்டு கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.சண்முகம், தாளாளா் என்.சக்திவேல், செயலாளா் எஸ்.ராஜா, இயக்குநா்கள் ஆா்.என்.அருள், எஸ்.சேகா், என்.சம்பூா்ணம், முதல்வா்கள், உடற்பயிற்சி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.