மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
வால்பாறையில் 35 ஹெக்டோ் அரசு தேயிலைத் தோட்டங்களை காப்புக் காடாக மாற்ற வனத் துறையிடம் ஒப்படைப்பு
வால்பாறையில் வனப் பகுதியில் உள்ள அரசு தேயிலைத் தோட்டங்களின் சில பகுதிகள் காப்புக் காடாக மாற்ற வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்துக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இதில் கோவை மாவட்டம் வால்பாறையில் ரயான் மற்றும் லாசன் கோட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன.
இதில் ரயான் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் இருந்த தேயிலைத் தோட்டங்கள் அடா்ந்த வனப் பகுதியில் அமைந்திருந்ததால் தொழிலாளா்கள் தேயிலைத் தோட்டங்களில் பணியில் இருந்தபோது வன விலங்குகள் தாக்கி உயிரிழந்ததால் சுமாா் 130 ஹெக்டோ் தேயிலைத் தோட்டங்கள் கடந்த 2012-இல் வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு காப்புக் காடமாக மாற்றப்பட்டன.
தற்போது, லாசன் கோட்டத்துக்கு உள்பட்ட தேயிலைத் தோட்டங்களின் சில பகுதிகள் அடா்ந்த வனப் பகுதியில் அமைந்திருந்தன. இதில் சின்னக்கல்லாறு எஸ்டேட்டில் 35 ஹெக்டோ் பரப்பளவிலான தேயிலைத் தோட்டங்களை காப்புக் காடாக மாற்ற வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதில் மானாம்பள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட அப்பகுதிகளுக்கு செல்ல வனத் துறை தடை விதிக்க உள்ள நிலையில், அங்கு செயல்பட்டு வரும் அஞ்சல் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வனத் துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.