மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
வால்பாறையில் பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரம்
வால்பாறையில் அதிகாலை நேரத்தில் வீசிய பலத்த காற்றால் எஸ்டேட் பகுதியில் மரம் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக இரவு தொடங்கி அதிகாலை வரை பலத்த காற்று வீசி வருகிறது. இதில் எஸ்டேட் பகுதிகளில் காற்றின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் சாலையில் பெரிய மரம் முறிந்து சாலையில் விழுந்தது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினா். இதனால் வால்பாறை- குரங்குமுடி எஸ்டேட் இடையே சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.