செய்திகள் :

விசா இருந்தும் அமெரிக்காவில் அனுமதி மறுப்பு! – உலகக் கோப்பை வாய்ப்பை இழந்த பிரபல சோமாலிய நடுவர்

post image

உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரில் நடுவராகச் செயல்படவிருந்த சோமாலியா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற நடுவர் ஓமர் அர்தானுக்கு (Omar Artan) அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார் என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிஃபா (FIFA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகக் கோப்பையில் நடுவராகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 முக்கிய நடுவர்களில் ஓமர் அர்தானும் ஒருவர். இந்தத் தொடரில் பங்கேற்பதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் நடுவராகக் களம் காணும் முதல் சோமாலியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்க அவர் தயாராக இருந்தார்.

இதற்காக கடந்த சனிக்கிழமை அன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து விமானம் மூலம் அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வந்தடைந்தார். அவரிடம் முறையான விசா மற்றும் பயண ஆவணங்கள் இருந்தபோதிலும், அமெரிக்கக் குடியுரிமை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கூடுதல் பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மீண்டும் இஸ்தான்புல்லுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

பாதுகாப்புப் பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாகவே அவர் அனுமதிக்கப்படவில்லை என்று அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. சோமாலியா உள்ளிட்ட சில நாடுகள் மீது தற்போதைய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஃபிஃபா, " போட்டியை நடத்தும் நாட்டின் (Host Country) குடிவரவு மற்றும் விசா நடைமுறைகளில் பிஃபா தலையிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் ஓமர் அர்தானின் விசா அந்தஸ்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பால் (CAF) 2025 ஆம் ஆண்டின் சிறந்த ஆண் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓமர் அர்தானுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது சோமாலிய அரசு மற்றும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "விளையாட்டின் நேர்மை மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை இது" என்று சோமாலிய விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FIFA: சர்ச்சை கோல்... சரித்திர கோல்! ஒரே போட்டியில் கடவுளும் சாத்தானுமாக மாறிய மரடோனா!

FIFA World Cup Diariesகால்பந்து உலகில் சில போட்டிகள் வெறும் ஆட்டமாக முடிந்துவிடுவதில்லை; அவை சரித்திரத்தின் பக்கங்களில் நிரந்தரமாக இடம்பெற்றுவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு போட்டிதான் 1986-ம் ஆண்டு உலகக்... மேலும் பார்க்க

FIFA : 2 லட்சம் பேர்... ஒரு கோல்... ஒரு தேசத்தின் அழுகுரல்!

MaracanazoFIFA World Cup Diariesவிளையாட்டு உலகில் சில நிகழ்வுகள் வெறும் எண்களாகவோ, முடிவுகளாகவோ நின்றுவிடுவதில்லை. அவை ஒரு தேசத்தின் ஆன்மாவில் ஆறாத காயமாகவும், மற்றொரு தேசத்தின் அழியாத காவியமாகவும் மா... மேலும் பார்க்க

மைதானத்திற்குள் நுழைந்து பேசிய இளவரசர்; ரத்தான கோல்: 1982 உலகக் கோப்பையின் மறக்க முடியாத சர்ச்சை!

FIFA World cup Diariesகால்பந்து போட்டிகளில் நடுவரின் முடிவை மாற்றுவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால், ஒரு நாட்டின் இளவரசரே மைதானத்திற்குள் இறங்கி வாக்குவாதம் செய்தால் என்னவாகும்? அப... மேலும் பார்க்க

FIFA: கத்தார் அணியில் ஒரு கண்ணூர் புயல்! தந்தையின் கனவை சுமந்து உலகக்கோப்பையில் களம்காணும் மலையாளி!

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா வந்துவிட்டாலே போதும், கேரளா மாநிலமே ஒரு கால்பந்து மைதானமாக மாறிவிடும். அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல், இங்கிலாந்து என உலகின் முன்னணி அணிகளின் கொடிகள் தெருவெங்கும் பட... மேலும் பார்க்க

பிரேசில் ஃப்ரீகிக்... திடீரெனப் பாய்ந்து பந்தை உதைத்த எதிரணி வீரர்! 1974 உலகக்கோப்பையின் விநோத நொடி!

உலகக்கோப்பை கால்பந்து வரலாறு விசித்திரமான தருணங்கள் பலவற்றைக் கண்டிருக்கிறது. ஆனால், சில சம்பவங்கள் வெறும் விசித்திரமாக மட்டுமல்லாமல், அதன் பின்னால் ஒரு பெரிய கதையையும் சுமந்து நிற்கும். அப்படியான ஒரு... மேலும் பார்க்க

FIFA : காலில் ஷூ இல்லை என்பதுதான் காரணமா? 1950 உலகக் கோப்பையை இந்தியா தவறவிட்டதன் சொல்லப்படாத கதை!

இந்திய கால்பந்து வரலாறு, தவறவிடப்பட்ட வாய்ப்புகளாலும், நிறைவேறாத கனவுகளாலும் நிரம்பியது. அதில், 1950-ல் நடந்த ஒரு சம்பவம், இன்றுவரை ஒரு தீராத வலியாக, 'என்ன நடந்திருக்கும்?' என்ற கேள்வியாக நிலைத்து நிற... மேலும் பார்க்க