செய்திகள் :

விசிக-விலிருந்து வெளியேறும் பனையூர் பாபு? - பின்னணி என்ன?

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்ற சூழலில் அக்கட்சியின் ஊடகப் பிரிவு முதன்மை செயலாளர் பனையூர் பாபு விலக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்து விரிவாக விசாரித்தோம்

திருமாவளவன்

வி.சி.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்கு சீட் கொடுக்காத திருமா, பொதுச்செயலாளர் சிந்தனை செல்வனை செய்யூருக்குத் தூக்கியடித்தார். இதனால் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள், பொதுச்செயலாளர்கள் எனப் பலருக்கும் தலைமைமீது ஏக வருத்தம் இருந்தது. ‘தேர்தல் முடிந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும்’ எனச் சொல்லப்பட்டுவந்த நிலையில், பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்தன. இச்சூழலில் ‘சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் மூவர் அப்செட்டாக இருக்கிறார்கள்’ என ஊரே பேசும்போது, இருவருக்கு மட்டும் பொறுப்பு வழங்கியது பாபு தரப்பைக் கொந்தளிக்க வைத்துவிட்டது. ஆகவே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும்படையோடு அவர் கட்சியிலிருந்து விலகலாம் என முன்பே பேசப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், "கடந்த ஆறு மாதங்களாக செய்யூர் தொகுதியை தயார் செய்து வைத்திருந்தார் பனையூர் பாபு. எந்த ஆலோசனையுமின்றி செய்யூர் தொகுதியை சிந்தனைச் செல்வனுக்கு கொடுத்துவிட்டார். இதனால் கடும் அப்செட்டான பாபு, வி.சி.க-விலிருந்து ஒதுங்கியிருந்தார். சீட் கிடைக்காத விரக்தி, கட்சியில் முக்கியத்துவம் இல்லை உள்ளிட்ட காரணங்களுடன் அவர் விலகலாம் என கிசுகிசுக்கப்பட்டன. இந்த சூழலில், விஜய் அமைச்சரவையில் வி.சி.க பங்கேற்றதையும் பனையூர் பாபு துளியும் விரும்பாத நிலையில் மே 24-ம் தேதி மாலை அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகலாம்" என்றனர்.

விஜய் - திருமாவளவன்
விஜய் - திருமாவளவன்

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் "வி.சி.க-வின் அதிகாரப்பூர்வ ஊடகமான வெளிச்சம் தொலைக்காட்சி பனையூர் பாபு மேற்பார்வையில்தான் செயல்படுவதாக தெரிகிறது, பாபு வெளியேறுவதாக இருந்தால் தொலைக்காட்சி யாரிடமிருக்கும் என்ற சர்ச்சை வி.சி.க-வுக்குள் வெடித்திருக்கிறது. மேலும் பனையூர் பாபு தனியாக செல்கிறாரா... பெரும் படையுடன் செல்கிறாரா.. என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றனர்.

'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்; கரப்பான் பூச்சி என்ற ஒரு சொல் பாஜகவை அலறி..' - பெ.சண்முகம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமீபத்தில் இளைஞர்களைக் கரப்பான்பூச்சி என்று கூறியிருந்தார்.இதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்று எக்ஸ் தளத்தில் பக்கம... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பலுசிஸ்தானில் ராணுவ ரயில்மீது தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் உடல் சிதறி பலி!

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தில், ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் மீது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர்... மேலும் பார்க்க

'தொடர் தோல்விக்கு பட்டியிலின மக்கள் ஆதரவின்மையே காரணம்' - வேணுகோபால் அதிமுக-விலிருந்து விலகல்

அதிமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.இந்த விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."மாண்புமிகு இதயதெய்வம், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்... மேலும் பார்க்க

சென்னை டு குமரி: மின்வெட்டு சிக்கல்கள்; தவிக்கும் மக்கள்... என்னதான் பிரச்னை?!

தமிழகம் முழுவதும் மின் வெட்டு விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. ஆட்சியமைத்த சில நாட்களிலேயே தவெக அரசுக்கு மின் விநியோகம் பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது. சென்னையின் முக்கியமான பகுதிகளில் இரவு நேரங்க... மேலும் பார்க்க

கேரளம்: லாட்டரி சில்லறை வியாபாரிக்கு அடித்த யோகம்; விஷூ பம்பர் பரிசாக ஏழைக்கு கிடைத்த ரூ.12 கோடி!

கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. ஓணம் பண்டிகை, சித்திரை விஷூ, ஆயுதபூஜை உள்ளிட்ட முக்கிய விழாக்காலங்களை முன்னிட்டு அதிக பரிசுகளைக் கொண்ட லாட்டரிகள் விற்பனை செய்வது வழக்கம். சித்... மேலும் பார்க்க

'நான் நவீனகால இயேசு' - வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நசீர் பெஸ்ட்டின் பின்னணி

அமெரிக்க நேரப்படி நேற்று மாலை, வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள செக் பாயிண்டில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாதுகாப்பு அதிக... மேலும் பார்க்க