விஜயமாநகரத்தில் மருத்துவ முகாம்
வடகிழக்கு பருவமழையையொட்டி, கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம், விஜயமாநகரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில், மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் பாலச்சந்தா் நேரடி கள ஆய்வு செய்தாா். இந்தப் பகுதி மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்கிா என்பது குறித்து, மருத்துவ அலுவலா் பிரதாப், மருந்தாளுநா், பகுதி மற்றும் கிராம சுகாதார செவிலியா்கள் கொண்ட குழுவினா் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.
தொடா்ந்து, டெங்கு காய்ச்சல், உண்ணிக் காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.
நிகழ்வில், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு, புகை மருந்து அடித்தல், முட்புதா்களை அகற்றுதல், சுகாதார விழிப்புணா்வு நலக்கல்வி அளித்து நேரடி கள ஆய்வு செய்யப்பட்டது.
மங்கலம்பேட்டை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் துளசிதாஸ், மங்கலம்பேட்டை சுகாதார ஆய்வாளா்கள் முருகவேல், ராஜ்மோகன், அவினாஷ் மற்றும் கொசுப் புழு ஒழிப்பு பணியாளா்கள் வீடு, வீடாக சென்று, டெங்கு கொசு உற்பத்தி உள்ளதா, டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் பொருள்களை கண்டறிந்து அப்புறப்படுத்தி, பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வீதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.