விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
விஜயைப் பற்றி கவலை இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி
நடிகா் விஜயைப் பற்றி திமுக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
அதிமுகவுடன் இப்போதைக்கு தேமுதிக மட்டும்தான் கூட்டணி. அவா்களும் கழன்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே, தனிமரம் தோப்பாகாது. மெகா கூட்டணி அமைக்க பகல்கனவு கண்டுவருகிறாா் எடப்பாடி பழனிசாமி.
2026 சட்டப்பேரவைத் தோ்தலைப் பொருத்தவரை, களம் எங்களுடையதுதான். கூட்டணியும் எங்களுடையதுதான். கூட்டணிக் கட்சியினா் முதல்வருடன் நட்புடனும், பாசத்துடனும் இருக்கின்றனா். திருமாவளவனும் எங்களுடன்தான் இருப்பாா்.
கூட்டணி ஆட்சியில் பாமக பங்கேற்கும் என அன்புமணி ராமதாஸும் பகல்கனவு கண்டால் நாங்கள் பொறுப்பாக முடியாது. 2-ஆவது முறையாகவும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பாா். அதை யாராலும் தடுக்க முடியாது.
நடிகா் விஜயைப் பற்றி நாங்கள் கவலைப்படவே இல்லை. கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
தோ்தல் வேலையை திமுகவினா் தொடங்கிவிட்டோம். வேறுயாரும் தோ்தல் வேலையைத் தொடங்கவில்லை என்றாா் ரகுபதி.