செய்திகள் :

"விஜய் எதிரியைச் சொல்லிவிட்டார்; கமலின் எதிரி யார்?" - கமல் சொன்ன பதில்!

post image

கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்வில் கமல்ஹாசன் நேற்றைய தினம் பங்கேற்றிருக்கிறார்.

அதில் பல்வேறு கேள்விகள் சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் கேட்கப்பட்டது. குறிப்பாக, 'ஒரு சீனியராக விஜய்க்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.

கமல்

Kamal Haasan: "இன்னும் நான் அந்த நல்ல படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்" - ஓய்வு குறித்து கமல் ஹாசன்

அதற்கு கமல், "நான் அறிவுரை கூறும் இடத்தில் இல்லை. சரியான நேரத்தில் எனக்கு அறிவுரை கிடைக்காததால் நான் அறிவுரைகளை ஏற்றுக் கொள்வதேயில்லை. என் தம்பி விஜய்க்கு அறிவுரை கூற இது சரியான நேரமில்லை என்று நினைக்கிறேன்.

'யவருடைய அறிவுரையைவிடவும் அனுபவமே சிறந்த ஆசான்' என்பேன் நான். அனுபவம் சொல்லித்தரும் அனைத்தையும்.

கேள்வி: விஜய் தவெக என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் எதிரி (திமுக, பாஜக) யார் என்று அடையாளம் கண்டுவிட்டார். கமல் அரசியலில் தனது எதிரியை இன்னும் அடையாளம் காணவில்லையா?

கமல்: தனிப்பட்ட வகையில் யாரும் எனக்கு எதிரிகள் அல்ல. என்னுடைய எதிரி மிகப்பெரியது. இங்கு இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்க்க தைரியமில்லாமல் பயப்படும் எதிரிதான் என்னுடைய எதிரி. அது சாதிதான். சாதிதான் என்னுடைய எதிரி. அந்த சாதியம் என்னும் எதிரியைக் கொன்றுவிடுவதுதான் என்னுடைய லட்சியம்.

விகடன் சினிமா விருதுகள் மேடையில் விஜய்க்கு விருது வழங்கிய கமல்
கமல் - விஜய்

ஏன் கொன்றுவிடுவேன் என்று வன்முறையாகச் சூளுரைக்கிறேன் என்றால், சாதியம் அவ்வளவு வன்முறையானது, கொடுமையான வன்முறைகளை இன்னுமும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அதைக் கொன்றுவிடவேண்டும் என்று லட்சியம் கொண்டுள்ளேன். அதுதான் என்னுடைய எதிரி, மிகப்பெரிய எதிரி" என்று பேசியிருக்கிறார் கமல்.

UP: SIR பணிகளால் அழுத்தம்; உயிரை மாய்த்துக்கொண்ட BLO - நடந்தது என்ன?

உத்தரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த 46 வயது BLO வேலைப்பழு காரணமாக தனது வீட்டில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு த... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்துக்கு நாயுடன் வந்த எம்.பி: பாஜகவினர் கண்டனம் - சர்ச்சையின் பின்னணி என்ன?

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ரேணுகா சவுத்ரி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (01.12,2025) நாய் ஒன்றை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றதற்காக பாஜகவினரால் கண்டிக்கப்ப... மேலும் பார்க்க

"அமித் ஷா சொல்லி தவெகவில் இணைந்தேனா?" - செங்கோட்டையன் சொன்ன பதில்

அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் (நவ.27) தவெக-வில் இணைந்தார். அன்று சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் பிரமாண்... மேலும் பார்க்க

`பழனிசாமி, மக்களை கேட்டுத்தான் 18 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தாரா?' - டிடிவி தினகரன்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கட்சி நிர்வாகி இல்ல விழாவுக்கு வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார். செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி"கூட்டணி குறித்து டிசம்பரில் அறிவிப்... மேலும் பார்க்க