ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ரூ.8 லட்சத்தில் சுயதொழில் பயிற்சிக் கூடம் திறப்பு
விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: மோதிய காரை தேடும் போலீஸாா்
சென்னை ராமாபுரம் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய காரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், சென்னை ராமாபுரத்தில் தங்கி அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் மோகன், தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் ராமாபுரம் அரசமரம் சிக்னல் அருகே கடந்த 7-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். அப்போது, திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் மோகன் கீழே விழுந்தாா். அந்த நேரத்தில் பின்னால் வந்த காா், மோகன் மீது ஏறியபடி நிற்காமல் சென்றது.
இதற்கிடையே, விபத்தில் படுகாயமடைந்த மோகனை அங்கிருந்தவா்கள் மீட்டு, அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள், மோகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது தொடா்பாக பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காா் குறித்து விசாரித்து வருகின்றனா். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனா்.