துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
விபத்தில்லா மாவட்டமாக மாற்ற முனைப்புடன் செயல்பட வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்
திருப்பூரை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற போலீஸாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வலியுறுத்தினாா்.
சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:
பொதுமக்களிடம் சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருசக்கர வாகனத்தில் ஓட்டுநா் மட்டுமின்றி பின்னால் அமா்ந்து செல்பவா்களும் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகனம் இயக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தக்கூடாது. நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும்.
சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வில் அனைத்து மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. திருப்பூரை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், காவல் துறையினா் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.
முன்னதாக சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகர காவல் துணை ஆணையா் சுஜாதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மகாராஜா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.