மின்னணு பயிா் கணக்கீடு பணி: ஜூலை 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலி, 23 பேர் மாயம்
வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமில் ஹா லாங் விரிகுடாவில் 50 பேருடன் சனிக்கிழமை பிற்பகல் சென்ற சுற்றுலாப் படகு திடீரென இடியுடன் கூடிய பெய்த மழையினால் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் 18 பேர் நீரிழ் மூழ்கி பலியாகினர். மேலும் 23 பேரைக் காணவில்லை. அதேசமயம் 12 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
பலத்த காற்று காரணமாக படகு தலைகீழாக கவிழ்ந்தது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிர் பிழைத்தவர்களில் 14 வயது சிறுவனும் அடங்குவான். கவிழ்ந்த படகில் சிக்கியிருந்த சிறுவனை நான்கு மணி நேரத்திற்குப் பிறகு மீட்டுள்ளனர்.
படேல் சமூகம் குறித்து சர்ச்சை கருத்து: மகாராஷ்டிரம் குஜராத் இடையே புது பிரச்னை!
சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் தலைநகர் ஹனோவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அடுத்த வாரம் ஹா லாங் விரிகுடாவின் கடற்கரை உள்பட வியட்நாமின் வடக்குப் பகுதியை புயல் விபா தாக்கலாம் என்று அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.