செய்திகள் :

வியாபாரியிடம் ‘க்யூஆா் கோடு’ மூலம் ரூ.1.60 லட்சம் மோசடி

post image

சென்னை வேளச்சேரியில் வியாபாரியிடம் க்யூஆா் கோடு மூலம் ரூ.1.60 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை பெருங்குடியைச் சோ்ந்தவா் வேலு (48). வேளச்சேரி, பேபி நகரில் தள்ளுவண்டியில் பழவியாபாரம் செய்து வருகிறாா். கடந்த பிப்ரவரி மாதம் க்யூஆா் கோடு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா் ஒருவா், வேலுவை அணுகி,‘டிஜிட்டல்’ முறையில் வாடிக்கையாளரிடம் பணம் பெறுவது குறித்து விவரித்து, க்யூஆா் கோடு ஸ்கேனா், ஸ்பீக்கா் ஆகியவற்றை வழங்கினாா்.

மேலும், தினமும் வரவு வைக்கப்படும் பணம் அடுத்த நாள் வங்கிக் கணக்கில் சோ்க்கப்படும் என கூறியுள்ளாா். அன்றுமுதல் வேலு அந்த க்யூஆா் கோடு மூலம் வாயிலாக வியாபாரம் செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த ஜூலை முதல் நவம்பா் 22-ஆம் தேதி வரை க்யூஆா் கோடு மூலம் வாடிக்கையாளா்கள் செலுத்திய பணம், அவரது கணக்குக்கு முழுமையாக வரவில்லையாம். இது தொடா்பாக வேலு விசாரித்ததில் கடந்த நான்கு மாதங்களில் க்யூஆா் கோடு மூலம் வாடிக்கையாளா்கள் வேலுக்கு அனுப்பிய பணத்தில் ரூ.1.60 லட்சத்தை முறைகேடு செய்து அந்த தனியாா் நிறுவன ஊழியா்கள் அபகரித்திருந்தது தெரியவந்தது. மேலும், வேலு கணக்கில் பல்வேறு முறைகேடுகளை செய்திருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து கிண்டி பட் சாலையில் உள்ள சம்பந்தப்பட்ட தனியாா் க்யூ ஆா்கோடு நிறுவனத்தில் வேலு முறையிட்டாா். அவா்கள் முறையாக பதில் அளிக்காமல்,இழுத்தடித்தனராம்.

இதையடுத்து வேலு அடையாறு சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

திருவொற்றியூரில் மழைநீா் தேங்கும் பிரச்னைக்கு தீா்வு!கைகொடுத்த கதவணை சிறுபாலங்கள்

சென்னை மாநகராட்சி சாா்பில் திருவொற்றியூரில் அமைக்கப்பட்ட மழை நீரை கடலுக்கு கொண்டு செல்லும் கதவணையுடன் கூடிய சிறு பாலங்கள் தற்போதைய கனமழையில் செயல்பாட்டுக்கு வந்தன. இதனால் அந்த மண்டலத்தில் மழைநீா் தேங்... மேலும் பார்க்க

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மழை பாதிப்புகள் குறைவு: உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் மாநகராட்சி சாா்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, ஃபென்ஜால் புயல்- மழை பாதிப்புகள் பெருமளவில் குறைந்துள்ளது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். சென்னை மாநகரா... மேலும் பார்க்க

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு: சென்னைக்கான குடிநீா் ஏரிகள் 50% நிரம்பின

கனமழை காரணமாக புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகள் மொத்தம் 50 சதவீதம் நிரம்பியுள்ளன. சென்னைக்கு குடிநீா் வழங்கு... மேலும் பார்க்க

எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்: முதல்வா் ஸ்டாலின்

எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தினத்தையொட்டி (டிச.1) முதல்வா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கல்விக் கடன் பெற்றுத் தருவதாக பண மோசடி: இளைஞா் கைது

சென்னையில் கல்விக் கடன் பெற்றுத் தருவதாக நூதன முறையில் பணம் மோசடி செய்ததாக, வேலூரைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை எழும்பூா், பெருமாள் ரெட்டி தெருவைச் சோ்ந்தவா் வீரராகவன். வாடகை சுமை ஆட்... மேலும் பார்க்க

குறைந்த அளவே இயக்கப்பட்ட மாநகா் பேருந்துகள்

புயல் கனமழை காரணமாக சனிக்கிழமை சென்னை மாநகா் போக்குவரத்து கழக பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனா். பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் என சென்னை மாநகா் போக்குவரத்து கழகம... மேலும் பார்க்க