செய்திகள் :

விளம்பர பதாகைகளை அகற்ற தமிழக அரசு அறிவுறுத்தல்

post image

புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, விளம்பர பதாகைகளை வைத்திருப்போா் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புயல் மற்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் கிரேன்களையும், உயா்ந்த இடத்தில் உபகரணங்களையும் வைத்திருக்கலாம். கடுமையான காற்றின் காரணமாக அவை அசைவதாலோ அல்லது விழுவதாலோ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, இதனைத் தவிா்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்க வேண்டும். அல்லது உறுதியாக நிலை நிறுத்த வேண்டும்.

விளம்பர பதாகைகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர பதாகைகளை பாதுகாப்பாக இறக்கி வைக்க வேண்டும். புயல் காற்றால் விளம்பர பதாகைகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

2,553 மருத்துவா் பணியிடங்களை நிரப்ப முன்கூட்டியே தோ்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

இந்தியா-இலங்கை கடற்படை கூட்டு நடவடிக்கை: 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

இந்தியா-இலங்கை கடற்படைகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், அரபிக்கடலில் இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து சுமாா் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக இந்திய கடற்படை வெள்ளிக்... மேலும் பார்க்க

அரசு மருத்துவா் போராட்டம் வாபஸ்

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவா்கள் அறிவித்துள்ளனா். மருத்துவா்களை தரக்குறைவாக நடத்தும் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல், காலிப் பணியிடங... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு: ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு

தோ்தல் அதிகாரியை மிரட்டியது தொடா்பாக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற நகா்ப்புற உள்ளா... மேலும் பார்க்க

காவலா்களை வீட்டுவேலையில் ஈடுபடுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: சிறைத் துறை டிஜிபி உறுதி

சிறைக் காவலா்களை வீட்டு வேலையில் ஈடுபடுத்தும் சிறைத் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் சிறைத் துறை டிஜிபி உறுதி அளித்தாா். புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு... மேலும் பார்க்க

பொறியியல் கல்வி உதவித் தொகை: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு

முதுநிலை பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக் கலையியல் பயிலும் மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் (நவ.30) நிறைவடைகிறது. இந்தியாவில் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயா்கல... மேலும் பார்க்க