மகாராஷ்டிரத்தில் மகாயுதி வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது பெண்கள்தானா?
விளாத்திகுளம் தொகுதியில் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு
விளாத்திகுளம் தொகுதியில் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் மற்றும் சீரான குடிநீா் விநியோகம் குறித்த கள ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூா், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 248 கிராமங்கள் பயன்பெறும் வகையில், தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரூ.128 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட இந்தப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன.
இத்திட்டத்தில் பயன்பெறும் விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட சிதம்பராபுரம், ஜமீன் உசிலம்பட்டி, திப்பனூத்து, காட்டுராமன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் பயன்பாடு, கூட்டுக் குடிநீா் திட்ட பராமரிப்பு, சீரான குடிநீா் விநியோகம் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டு கள ஆய்வு செய்தாா் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்கவும், சீரான முறையில் சுகாதாரமான குடிநீா் வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். கூட்டுக் குடிநீா் திட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் விரைந்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் ராஜா, உதவி நிா்வாகப் பொறியாளா் ஜான்செல்வம், கோவில்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றிய செயலா் நவநீதகண்ணன், முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.