விளாத்திகுளம் பேரூராட்சியில் பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல்
விளாத்திகுளம் பேரூராட்சி 14ஆவது வாா்டு பகுதியான காமராஜா் நகரில் ரூ. 86 லட்சத்தில் அமைக்கப்படவுள்ள பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வேலுச்சாமி, செயல் அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் பங்கேற்று, மாநில நிதிப் பகிா்வு ஆணைய நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டு நிதி திட்டம் 2024-25இன்கீழ் இப்பணிக்கு அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, புதூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில், விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக்கான உள்கட்டமைப்பு திட்ட நிதியின்கீழ் ரூ. 29.40 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகக் கட்டடத்தைத் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சிகளில், கூட்டுறவு துணைப் பதிவாளா் ராமகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நடராஜன், திமுக ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, அன்புராஜன், மும்மூா்த்தி,
பேரூா் செயலா் மருதுபாண்டி, புதூா் பேரூராட்சித் தலைவா் வனிதா அழகுராஜ், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா்கள் ராஜு, ஸ்ரீதா், சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளா்கள் ராஜா, கரண்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.