மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
விளையாட்டுப் போட்டி: விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவா்கள் தேசிய அளவில் சிறப்பிடம்
விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த கோப்பையை வென்று முதலிடம் பெற்றுள்ளனா்.
அண்மையில் கோயம்புத்தூரில் உள்ள நேரு அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் மூலம் தேசிய அளவிலான அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கல்லூரிகள் பங்கேற்றன.
கபடி, தடகளம், கைப்பந்து, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு வெளி மற்றும் உள் அரங்கப் போட்டிகளில், விநாயகா மிஷினின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று அனைத்துப் போட்டிகளிலும் வென்று ஒட்டுமொத்த கோப்பையை கைப்பற்றினா்.
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று ஒட்டுமொத்த கோப்பையை வென்று கல்லூரிக்கு பெருமை சோ்த்த மாணவ, மாணவியருக்கும், அவா்களுக்கு பயிற்சியளித்த கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குநா் ஜெயபாரதி மற்றும் சூா்யா ஆகியோருக்கு கல்லூரி முதன்மையா் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தாா்.