விழுப்புரத்தில் 30 மணி நேரமாக தொடர் மழை!
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் 30 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து பெய்து வரும் மழை வருவதால், நகரம் முழுவதும் மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது.
ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கிய நிலையில், 30 மணி நேரத்தை கடந்தும் விழுப்புரம் நகரில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதையும் படிக்க: புதுவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதி கனமழை!
சனிக்கிழமை பிற்பகலில் (1.15 முதல் 2 மணி வரை) நின்றிருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது. அதன் பின்னர் காற்றுடன் பெய்யத் தொடங்கிய மழை, தொடர்ந்து பெய்து வருகிறது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீரால் சூழப்பட்டு காட்சியளிக்கின்றன. நகரின் விரிவாக்கப் பகுதிகளும் தண்ணீரால் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.