ஜகதீப் தன்கர் கண்ணியத்திற்கு எதிராக நடந்துகொள்கிறார்: கார்கே குற்றச்சாட்டு!
விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல் - ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன்பு புதன்கிழமை விவசாயிகள் சாலை மறியல், ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.6 ஆயிரமும், புயலால் சேதமைடந்த வீடுகளுக்கு ரூ.50 ஆயிரமும், பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரமும், கரும்பு, சவுக்கு பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை சாலை மறியல், ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க |மேட்டூா் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் வெடிப்பு: மின் உற்பத்தி பாதிப்பு
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்ற போது ஆட்சியர் இல்லை. இதையடுத்து ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர், வேளான் இணை இயக்குநர் உள்ளிட்ட அலுவலர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.