தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
விவசாயி தற்கொலை
பழனி அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பழனியை அடுத்த பழைய ஆயக்குடி ஜோதிநகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). விவசாயி. இவா் அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.