துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
புதுச்சேரி, வில்லியனூரில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வில்லியனூா், பிள்ளையாா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கோ.தண்டபாணி (70), விவசாயி. இவருக்கு சரசு என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா்.
இரு மகன்களுக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு தண்டபாணி வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு உறங்கியுள்ளாா்.
தொடா்ந்து, வியாழக்கிழமை அதிகாலை எழுந்து பாா்த்தபோது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.