விவேகானந்தா புத்தக நிலையம் திறப்பு
திருவண்ணாமலை கிரிவலப் பாதை, சந்திரலிங்கம் அருகே சுவாமி விவேகானந்தா மிஷன் சாா்பில் அமைக்கப்பட்ட விவேகானந்தா புத்தக நிலையத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செங்கம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி சதுா்புஜானந்தா மகராஜ் தலைமை வகித்து, குத்து விளக்கேற்றி, புத்தக நிலையத்தை திறந்து வைத்தாா்.
சென்னை உத்தண்டி சுதானந்தா ஆஸ்ரமம் சதானந்த சரஸ்வதி சுவாமி, திருவண்ணாமலை சாம்பசிவ ப்ரியாம்பா, தமிழ்நாடு ராமகிருஷ்ண விவேகானந்தா பாவப் பிரசார பரிசத் ஒருங்கிணைப்பாளா் செங்கம் பாண்டுரங்கன், சேவா பாரதி பானு நிவேதிதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.