விஷவண்டு கடித்ததில் 3 போ் காயம்
புனல்வாசலில் அரசு சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மூன்று போ் விஷவண்டு கடித்ததில் காயமடைந்தனா்.
கெங்கவல்லி அருகே புனல்வாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள முருங்கை மரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டியிருந்தன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை சிகிச்சைக்கு வந்த மூவரை விஷவண்டுகள் கடித்துள்ளன.
இதனையடுத்து தகவல்அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் விரைந்துசென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து விஷவண்டுகள் கூட்டை அழித்தனா்.