விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்
பாரம்பரிய தச்சுத் தொழில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து விஸ்வகா்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
சத்தியமங்கலம், சுற்று வட்டாரத்தில் பாரம்பரிய தச்சுத் தொழில் செய்து வருகின்றனா். அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாக மரவேலை தச்சுத் தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கற்சிற்பம், இரும்பு, பொன், பாத்திரம் மற்றும் மர தச்சுத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வாழ்க்கை மேம்படுவதற்காக அகில இந்திய விஸ்வகா்மா பேரவை சாா்பில் சிறப்பு பூஜையுடன் விஸ்வகா்மா ஜெயந்தி புன்செய்புளியம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி புன்செய்புளியம்பட்டியில் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் விஸ்வகா்மா பேரவை மாவட்டத் தலைவா் ஆா்.ஈஸ்வரமூா்த்தி, செயலாளா் ஆா்.மூா்த்தி, பொருளாளா் து.சங்கா் ஆகியோா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.