செய்திகள் :

வீடூர் அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

post image

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக வீடூர் அணை நிரம்பியது. இதனால் பாதுகாப்பு கருதி அனைத்து கதவுகளையும் திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு, கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வீடூர் அணை பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அதன் கொள்ளளவான 605 மில்லியன் கன அடியில் (32அடி) 487.52 மில்லியன் கன அடி(30.5அடி) நிரம்பியது அணைக்கு வினாடிக்கு 36, 203 கன அடி நீர் வரத் தொடங்கியது.

இதையடுத்து, அணை கண்காணிப்பு அதிகாரிகள் சுற்றுப்புறக் கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சனிக்கிழமை இரவு 11:30 மணி அளவில் அபாய சங்கு ஒலியை எழுப்பினர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:30 மணி அளவில் அணையில் 9 கதவுகளையும் திறந்து, 36,203 கன அடி உபரி நீரை அணையிலிருந்து வெளியே திறந்து விட்டனர்.

அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாக சங்கராபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வெளியேறியது.

இதையும் படிக்க: புதுவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதி கனமழை!

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணி வரை வீடூர் அணைப்பகுதியில் 264 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

வீடூர் அணையின் நீர் வரத்துகளை நீர் வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா ஞாயிற்றுக்கிழமை காலை ஆய்வு செய்தார். உதவிச் செயற்பொறியாளர் ரமேஷ், உதவிப் பொறியாளர் பாபு ஆகியோர் அணை நீர்வரத்து குறித்து தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் .

விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் தலைமையில் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸார் அணை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் கனமழை: வாகனங்களின்றி வெறிச்சோடிய சாலைகள்!

சேலம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் இன்றி சாலை வெறிச்சோடி காணப்பட்டது.ஃபென்ஜால் புயல் காரணமாக சேலம் மா... மேலும் பார்க்க

ஆம்னி வேன் மோதி நடைப்பயிற்சி சென்ற 3 பேர் பலி!

நாமக்கல்: மோகனூரில் நடைப்பயிற்சி சென்றபோது, ஆம்னி வேன் மோதியதில், இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.நாமக்கல் மாவட்டம், மோகனூர் அராக் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மலையண்ணன்(68). இவரது மனைவி, நிர்மல... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே ஒரு கோடு போடப்பட்டு, வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு, ஆண்... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலின் தற்போதைய நிலை என்ன?

ஃபென்ஜால் புயல் தற்போதைய நிலவரப்படி, கடந்த 6 மணி நேரமாக நகராமல் கடலூருக்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும், விழுப்புரத்துக்கு கிழக்கே 40 கிமீ நிலை கொண்டுள்ளது.இப்புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த ... மேலும் பார்க்க

அவிநாசி: நடைபயிற்சி சென்ற கார் விற்பனையாளர் வெட்டிக் கொலை

அவிநாசி: அவிநாசியில் நடைபயிற்சி சென்றுக் கொண்டிருந்த கார் விற்பனையாளரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வேலாயுதம்பாளையம் ஊராட்... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் 30 மணி நேரமாக தொடர் மழை!

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் 30 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து பெய்து வரும் மழை வருவதால், நகரம் முழுவதும் மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது. ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வ... மேலும் பார்க்க