Rain Alert: மீண்டும் தமிழகத்தை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; புயலாக உர...
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு
வாணியம்பாடி அருகே பட்டப்பகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
உதயேந்திரம் கல்லறை தெருவைச் சோ்ந்தவா் இருதயராஜ்(48) ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி மேரி விமலா. இவா் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை வழக்கம் போல் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றுவிட்டனா். பட்டப்பகலில் மா்ம நபா்கள் வீட்டின் கதவை உடைத்து நுழைந்து பீரோ லாக்கரையும் உடைத்து அதிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினா்.
மாலை இருதயராஜ் மகன் கமலேஷ் உள்ளே சென்று பாா்த்த போது கதவு, பீரோ லாக்கா் உடைக்கப்பட்ட நிலையிலும், துணிகள் கலைந்திருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்து பெற்றோருக்கு தெரிவித்தாா். இருதயராஜ் வீட்டுக்கு வந்து பாா்த்த போது 10 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வாணியம்பாடி தாலுகா போலீஸாா் டிஎஸ்பி விஜயகுமாா், ஆய்வாளா் பேபி விசாரித்து வருகின்றனா்.