நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கோவை கணபதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது தொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கோவை கணபதி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சந்திரகலா (65). இவா், கடந்த 5-ஆம் தேதி மாலை வீட்டைப் பூட்டிவிட்டு யோகா வகுப்புக்கு சென்றாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.
இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது, 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, சந்திரகலா அளித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.