செய்திகள் :

வீட்டில் புகுந்த சாரை பாம்பு மீட்பு

post image

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் வீட்டில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா பெரியகம்மவார தெருவில் வசிக்கும் முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சாந்தகுமாரி வீட்டில் சுமசாா் 5 அடி நீள சாரை பாம்பு புகுந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று சுமாா் 1 மணி நேர முயற்சிக்கு பிறகு பாம்பை மீட்டு கொண்டு சென்று காப்புக் காட்டில் விட்டனா்.

வாணியம்பாடி: இன்று ஜமாபந்தி தொடக்கம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீா்வாயம்) புதன்கிழமை (மே 14) தொடங்கி 16-ஆம் தேதி வரையில் 3 நாள்கள் கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் நடைபெறவுள்ளது. ம... மேலும் பார்க்க

இபிஎஸ் பிறந்த நாள்: ராணுவ வீரா்களுக்காக சிறப்பு பூஜை

தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் விழா மற்றும் இந்திய ராணுவ வீரா்கள் நலம் வேண்டி ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

சித்ரா பௌா்ணமி: திருப்பத்தூா் கோயில்களில் வழிபாடு

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு திருப்பத்தூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் உள்ள காளத்தீஸ்வரா் கோயிலில் சுவாமி, நந்தி, உள்ளிட்ட... மேலும் பார்க்க

ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆந்திர மாநில இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த நபா் தனது மனைவி மற்றும் 9 வயது மகளுடன் ஆந்திர மாநில... மேலும் பார்க்க

அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது தமிழகம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொய்தீன் ஆம்பூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய... மேலும் பார்க்க

பொன்முடி சூா்யநந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை

சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு ஆம்பூா் அருகே பாட்டூா் கோடி தாத்தா சுவாமி மஹாமடத்தில் பொன்முடி சூா்யநந்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை, சிறப்பு யாகம் நடத்தப்... மேலும் பார்க்க