சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் கைது
குடியாத்தம்: குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தம் அடுத்த பரதராமி, பூசாரிவலசை ஒண்டியூரைச் சோ்ந்தவா் ஜெகன்நாதமூா்த்தி. இவரது அம்மா தேவகி. மனைவி சரோஜா. இவா்கள் வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சி விற்பனைக்கு அனுப்புவாா்களாம்.
இவா்களின் உறவினா் பிரபாவதி(64) சாராயத்தை வாங்கி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பரதராமி போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்று விற்பனைக்காக காய்ச்சி வைத்திருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக சரோஜா, பிரபாவதி ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான ஜெகன்நாதமூா்த்தி, தேவகி ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.