Steve Jobs: "அவர் விரும்பி படித்த இந்திய யோகியின் புத்தகம் இதுதான்" - நண்பர் பகி...
வீட்டுமனைகளை அளந்து தர கோரிக்கை
திருத்தணி அருகே ஆா்.வி.என்.கண்டிகையில் வீட்டுமனைகளை அளந்து தர வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனா்.
திருத்தணி ஒன்றியம், ஆா்.வி.என்.கண்டிகை பகுதியில் வீடுகள் இல்லாததவா்களுக்கு கடந்த, 1999-ஆம் ஆண்டு மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறையின் சாா்பில், 100 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் வீட்டு மனைகளை வருவாய்த் துறையினா் அளந்து தராமல் உள்ளனா்.
இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் புதன்கிழமை திருத்தணி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு, இலவச வீட்டுமனைகளை அளந்து தர வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், வட்டாட்சியா் மலா்வழியிடம், மனைகள் அளந்து கொடுத்தால், தான் பட்டா பெற முடியும், கலைஞரின் கனவு இல்லம், பிரதமரின் வீடு வழங்கும் ஆகிய திட்டங்கள் மூலம் சொந்தமாக வீடுகள் கட்டிக் கொள்ள முடியும் என மனு அளித்தனா். மனுவைப் பெற்ற வட்டாட்சியா் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா்.