திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
வீரவநல்லூரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
வீரவநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வீரவநல்லூா் காவல் நிலைய சரகம் இந்திரா நகா் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ஆஷா ஜெபகா் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில், வீரவநல்லூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த படாபட்டன் (48) என்பதும், விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 420 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.