செய்திகள் :

வீராணம் ஏரியிலிருந்து 22,000 கன அடி உபரிநீா் வெளியேற்றம்

post image

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 22,000 கன அடி வீதம் உபரிநீா் வெள்ளிக்கிழமை முதல் வெளியேற்றப்படுகிறது.

காட்டுமன்னாா்கோயிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீா் வருகிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடி ஆகும். அதாவது 1,465 மில்லியன் கன அடி தண்ணீா் தேக்கப்படுகிறது. ஏரியின் மூலம் 44,456 ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக நாள்தோறும் 74 கனஅடி அனுப்பப்படுகிறது.

மழைக் காலங்களில் மிகப்பெரிய வடிகாலாகவும் உள்ளது. மழைக்காலங்களில் வெள்ளியங்கால் மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் உபரி நீா் வெளியேற்றப்படும்.

இந்த நிலையில், கடந்த இரு நாள்ககளாக காவிரி-டெல்டாவின் கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நகரப் பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெண்ணங்குழி ,பாப்பாக்குடி, ராமதேவநல்லூர் ஆகிய ஓடைகளின் வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 22,000 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருகிறது.

இதையும் படிக்க |மழை பாதிப்பை எதிர்கொள்ள தயார்: முதல்வர் ஸ்டாலின்

தொடா் மழையால் வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி பொதுப் பணித் துறை அதிகாரிகள் லால்பேட்டையில் உள்ள வெள்ளியங்கால் மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் வினாடிக்கு 22 ஆயிரத்து 804 கன அடிகன அடி வீதமும், சேத்தியாதோப்பு அணைக்கட்டு வாயிலாக வினாடிக்கு 1,410 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.

மேலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி தீவிர ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தொடர் மழையால் வெங்கடேசபுரம் மடப்புரம், மழுவத்தேரி ம.குளக்குடி வ.குளக்குடி, ருத்திரசோலை ரஜாக் நகர், மணவெளி , கண்டமங்கலம் ரோட்டு தெரு, வீராணந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.இந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடுகள் முழுவதும் வெள்ளநீரால் சூழ்ந்து காணப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்த வந்த நிலையில் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியில் தற்போது பெய்து வரும் பருவமழை மிகவும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணி: கேரள அரசு அனுமதி!

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்றுமுல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காககட்டுமானப் பொருள்களை எடுத்து செல்லகேரள அரசின் வனத்துறை அனுமதிஅளித்துள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இது தொடர்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலி!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் வெள்ளிக்கிழமை பலியானார். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அருகே தாதமரைக்குளம்... மேலும் பார்க்க

ஓடிடியில் ஹிட் லிஸ்ட்!

விஜய் கனிஷ்கா - சரத்குமார் நடிப்பில் வெளியான ஹிட் லிஸ்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய்கனிஷ்கா அறிமுகமான படம் ‘ஹிட் லிஸ்ட்’. இந்த படத்தை சூர்யகதிர், கே. கார்த்திக... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கூம்பு வடிவ மற்றும் நீல் உருண்டை வடிவிலான சூது பவள மணிகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகர... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசு: முதல்வர் அறிவிப்பு!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷுக்கு ரூ. 5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின... மேலும் பார்க்க

பூண்டி ஏரியில் உபரிநீா் திறப்பு 16,500 கன அடியாக அதிகரிப்பு!

திருவள்ளூர்: திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்த மழையால் பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால் வெள்ளிக்கிழமை உபரிநீர் 16,500 கன அடி அதிகரித்துள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் இருபுறமும் உள்ள கிர... மேலும் பார்க்க