வெடி வெடிக்காத வேடந்தாங்கல் கிராம மக்கள்
மதுராந்தகம் அருகே புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ள வேடந்தாங்கலில் கிராம மக்கள் பட்டாசுகளை வெடிக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. வேடந்தாங்கல் ஏரியில் சுமாா் 75 ஏக்கா் பரப்பில் இந்த பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது.
இந்த பறவைகள் சரணாலயத்துக்கு சைபீரியா, இலங்கை, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பல்வேறு வகையிலான பறவைகள் வந்து இருந்துவிட்டு தமது நாட்டுக்கு திரும்பிச் செல்கின்றன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடியநிலையிலும் வெடிகளை வெடிக்காமல் இருந்து வருகின்றனா். இங்குள்ள பறவைகளை அதிகமாக நேசிப்பதாலும், ஊறுவிளைவிக்க கூடாது என்ற பரந்த மனப்பான்மையுடன், சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை கடந்த சில தினங்களாக வெடிகளை வெடிக்காமல் இருந்து வருகின்றனா்.