செய்திகள் :

வென்றும் SRMU கண்ணையா செல்வாக்கு சரிகிறதா? 11 ஆண்டுகளுக்குப் பின் அங்கீகாரத்தை மீட்ட தொழிற்சங்கம்

post image
ரயில்வேயில் தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதற்காக டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தெற்கு ரயில்வேயைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக நிர்வாகத்தில் பெரியதொரு ஆதிக்கம் செலுத்தி வந்த கண்ணையாவின் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) சுமார் நூறு வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அமைப்பான டி.ஆர்.இ.யூ 11 ஆண்டுகளுக்கு முன் இழந்த அங்கீகாரத்தைத் திரும்பவும் பெற்று எஸ்.ஆர்.எம்.யூ.வுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

ஆறு வருடங்களுக்கொருமுறை நடக்க வேண்டிய இந்தத் தேர்தல் நடைபெறாமலேயே இருந்து வந்தது. டி.ஆர்.இ.யூ அமைப்புதான் நீதிமன்றம் சென்று இந்தத் தேர்தல் நடக்கக் காரணமாக இருந்தது.

76,000 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டன. ஆரம்பத்திலிருந்தே எஸ்.ஆர்.எம்.யூ – டி.ஆர்.இ.யூ இடையேதான் கடும் போட்டி நிலவியது.

காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆதரவு பெற்ற சங்கங்களுக்கெல்லாம் தெற்கு ரயில்வேயைப் பொறுத்தவரை செல்வாக்கு குறைவு என்பதால் அந்த சங்கங்கள் மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றன.

எஸ்.ஆரெம்.யூ கண்ணையா

இறுதியில் எஸ்.ஆர்.எம்.யூ 26258 வாக்குகளும் டி.ஆர்.இ.யூ 26151 வாக்குகளும் பெற்றன.

சதவிகிதத்தின் அடிப்படையில் முப்பது சதவிகிதத்துக்கு மேல் வாக்குகள் பெற்ற சங்கங்கள் அங்கீகரிக்கப்படுமென்பதால் இந்த இரண்டு சங்கங்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. இரண்டுக்குமான வாக்கு வித்தியாசம் 107.

இனி வருங்காலங்களில் ரயில்வே ஊழியர்களின் எந்தவொரு பிரச்னை என்றாலும் இந்த இரண்டு சங்கங்களுடன் தான் ரயில்வே நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்துமென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து ரயில்வே ஊழியர்கள் சிலரிடம் பேசிய போது,

‘’தெற்கு ரயில்வேயில கண்ணையாவின் மஸ்தூர் யூனியன் தான் பல வருடங்களா செல்வாக்கா இருந்துட்டு வருது. கண்ணையா எந்தக் கட்சியையும் சேராதவர்னு சொல்லிக்கிட்டாலும் தமிழகத்துல ஆளுங்கட்சி எதுவா இருக்கோ அது கூட ஒருவித நெருக்கத்தை உண்டாக்கிக்கிடுவார்னு ஒரு கருத்து உண்டு. அந்த வகையில இப்ப திமுக ஆதரவு நிலைப்பாட்டுல இருக்கறதா சொல்றாங்க. ஆனா கட்சிகளைத் தாண்டி தன்னுடைய செல்வாக்கை நிர்வாகத்துல வலுவா வச்சிட்டே இருந்தார்.

ஆனா கடந்த சில வருடங்களா அவருடைய நிர்வாகிகள் ஊழியர்களின் நலன் சார்ந்த விஷயங்கள்ல அக்கறை காட்டாம, பணியிட மாறுதல் போன்ற விஷயங்கள்ல அவங்ககிட்டயே பணம் வாங்குற மாதிரியான காரியங்கள்ல ஈடுபட்டதா நிறைய புகார்கள்.

Railway union election

ஓட்டு கேட்டுப் போனபோது இது தொடர்பா நிறைய எதிர்க்கருத்துகளை எதிர்கொண்டதால கடைசி நேரத்துல ஒரு வீடியோ வெளியிட்டு தன்னுடைய ஆட்கள் செய்த தவறுகளை மறந்துடுங்கன்னு கேட்டார். அதுவே அவருக்கு எதிராகவும் அமைஞ்சிடுச்சுன்னு தோணுது. இப்ப அவங்கதான் முதலிடம்னாலும் வாக்கு வித்தியாசம் முந்தையத் தேர்தல்களைக் காட்டிலும் ரொம்ப ரொம்பக் குறைவு. இதுக்கு முன்னாடில்லாம் பெரிய வித்தியாசத்தில் ஜெயிச்சிட்டிருந்தவங்க இப்ப கிட்டத்தட்ட கஷ்டப்பட்டுதான் முதலிடத்தைப் பிடிச்சிருக்காங்க. இது தெற்கு ரயில்வேயில எஸ்.ஆர்.எம்.யூ, கண்ணையாவின் ஆதிக்கம் குறையத் தொடங்கியிருக்கோன்னுதான் நினைக்கத் தோணுது.

ஏன்னா, ரெண்டு தேர்தல்ல தோத்து அங்கீகாரம் கிடைக்காமலிருந்த தட்சின ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன் இந்தத் தேர்தல்ல வாங்கியிருக்கிற வாக்குகள் ரொம்பவே அதிகம்’’ என்கின்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கங்களுக்கு ரயில்வே வளாகங்களில் சங்க அலுவலகத்துக்கான இடம் உள்ளிட்ட சில சலுகைகளும் உண்டாம்.  

`முந்திரி, ஆவின் நெய்' - தமிழ்நாடு அரசின் மூன்று பொங்கல் தொகுப்புகள்; பொருட்கள் இவைதான்

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு 'கூட்டுறவு பொங்கல்' என்ற பெயரில் பொங்கல் தொகுப்புகளை விற்பனை செய்ய உள்ளது.மூன்று தொகுப்புகள்...இந்தத் தொகுப்புகள் மூன்று வகையாக விற்பனை ஆக உள்ளது. அவ... மேலும் பார்க்க

முதல்முறையாக `நம்பிக்கையில்லா தீர்மானம்’ - எதிர்க்கட்சிகளிடம் பாரபட்சம் காட்டுகிறாரா ஜகதீப் தன்கர்?

சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மாநிலங்களவை தலைவர் மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளன. குடியரசு துணைத் தலைவராகவும், மாநிலங்களவை சபாநாயகராகவும் உள்ள... மேலும் பார்க்க

Udhayanidhi: "மாநிலங்களை ஒழித்துவிடும்"- 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து உதயநிதி எச்சரிப்பது என்ன?

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்திருக்கிறது.நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மசோதாவைத் தாக்கல் செ... மேலும் பார்க்க

பிறந்த நாளில் சரத்பவாரைச் சந்தித்து வாழ்த்திய அஜித்பவார், அமித் ஷா; யாருக்குக் குறி? யாருக்கு லாபம்?

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்த பிறகு மாநில துணை முதல்வர் அஜித்பவார் இரண்டு முறை சரத்பவாரைச் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். ஆனால் அஜித்பவாருடன் சரத்பவார் சமானாதமா... மேலும் பார்க்க

இனி ஒரே நாடு ஒரே தேர்தல்? |RN Ravi-ன் மகளுக்கு ஜார்ஜ் சோரஸ் நிறுவனத்துடன் தொடர்பா? - Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* விழுப்புரம்: சாதனை மாணவியை வரவேற்று ஆசிரியர்கள் நடனம்! #ViralVideo* ஶ்ரீரங்கம் கோயிலுக்கு வைர கிரீடம் வழங்கிய பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன்... ஏன்? * கனமழையில் தத்தளி... மேலும் பார்க்க