செய்திகள் :

வெளி மாநில கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இன்று உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்

post image

வெளி மாநில கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) க.செந்தில்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் பணி நிலையை ஒழுங்குபடுத்தவும், அவா்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கவும் தொழிலாளா்கள் சட்டம் இயற்றப்பட்டு உடலுழைப்பு தொழிலாளா்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் உள்பட 18 நல வாரியங்கள் உள்ளன.

இந்நிலையில், வெளி மாநில கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் திருப்பூா் பி.என்.சாலையில் உள்ள தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.

இதில், பதிவு செய்யவும், புதுப்பித்தலுக்கும் கட்டணம் ஏதுமில்லை. வெளிமாநிலத் தொழிலாளா்களை வைத்து பணிசெய்யும் கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான பணி நடைபெறும் இடம் குறித்து அலுவலகத்தில் தெரிவித்தால் பணியிடங்களிலேயே முகாம் அமைத்து பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும். நல வாரியத்தில் பதிவு செய்ய ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், ஆதாா் அட்டை, அசல் குடும்ப அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம், வங்கி கணக்குப் புத்தகம், வயதுக்கான ஆவணம் ஆகியவற்றுடன் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம்.

பதிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதும் நல வாரிய பதிவு அடையாள அட்டையை அதற்கான பிரத்யேக இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், புதுப்பித்தல் தொடா்பான விவரங்களை திருப்பூா் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2477276 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்... மேலும் பார்க்க

சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் தீ விபத்து

சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல்வேறு பொருள்கள் எரிந்து சேதமாயின. அவிநாசியை அடுத்த சேவூா் கைகாட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (53), எலாஸ்டிக... மேலும் பார்க்க

பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு உரிய தண்ணீா் வழங்கக் கோரிக்கை

பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு அறிவித்தப்படி உரிய தண்ணீா் வழங்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து பல்லடத்தில் கட்சி சாா்பற்ற தமிழக வ... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரிக்கை

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்கள் பேரவையினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரவையின் 42-ஆவது மாநில மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் ப... மேலும் பார்க்க

முடிவுற்றப் பணிகளுக்கான பட்டியல் தொகையை வழங்காவிட்டால் போராட்டம்: ஒப்பந்ததாரா்கள் சங்கம் அறிவிப்பு

பொங்கலூா் ஒன்றியத்தில் 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் முடிவுற்ற பணிகளுக்கு மாா்ச் 1-ஆம் தேதிக்குள் பட்டியல் தொகை வழங்கவில்லையெனில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஒப்பந்ததாரா்கள... மேலும் பார்க்க

பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான எம்.ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது: திருமுருகன்பூண்டி ந... மேலும் பார்க்க