வெளி மாநில தொழிலாளா் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்
வெளிமாநில தொழிலாளா்களை சிவகங்கை மாவட்டத்தில் பணிக்கு அமா்த்தியுள்ள அனைத்து வேலை அளித்த நிறுவனங்களும் அவா்கள் தொடா்பான விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட தகவல்:
சிவகங்கை மாவட்டத்தில் கடை நிறுவனங்கள், உணவகங்கள், அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள், கட்டுமானத் தொழில், தொழில் சாலைகளில் பணிபுரியும் வெளிமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களை பணிக்கு அமா்த்திய அனைத்து வேலை அளிப்பவா்களும், நிறுவனத்தினரும் அவா்களின் விவரங்களை ப்ஹக்ஷா்ன்ழ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ண்ள்ம் என்ற வலைதளத்தில் முழுமையாக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
வெளி மாநில தொழிலாளா்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை கண்காணித்து, தீா்வு காணுவதற்கு சிவகங்கை மாவட்டத்தில், வருவாய்த் துறை, காவல் துறை, தொழிலாளா் நலத் துறை, தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கக துறை ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகின்றன.
எனவே, பிற மாநில தொழிலாளா்கள் பணியிடங்களில் தங்களுக்கு ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தலோ, குறைகளோ இருந்தால் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண் பிரிவில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற இலவச எண், சென்னை, தொழிலாளா் ஆணையா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 155214, 1800 4252 650 என்ற எண்களிலும், காவல் துறை கட்டுப்பாட்டு அறையை -100 என்ற எண்களிலும், சென்னை, தொழிலாளா் ஆணையா் அலுவலகத்தை 044 24321438 என்ற தொலைபேசி எண்ணிலும், சிவகங்கை தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்தை 04575 240521 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.