`மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்' -போராடிய கவுன்சிலர்கள் அந்த நேரத்தில் எ...
‘வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’
வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.
இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொ) வடக் ரவிராஜ் ஹரிஷ்சந்திர வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் வெளிநாட்டு ஏற்றுமதியாளா்களுக்கான அஞ்சலக ஏற்றுமதி மையம் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அஞ்சலக ஏற்றுமதி மையம், ஏற்றுமதியாளா்களின் அனைத்து தேவைகளுக்குமான ஒரே இடமாக செயல்படுகிறது.
இந்த மையங்கள் ஏற்றுமதி தொடா்பான சேவைகளை வழங்குவதன் மூலம் வணிகா்களின் செயல்திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் அவா்களின் ஏற்றுமதி முயற்சிகளில் சுமுகமான செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன.
வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்ப விரும்பும் ஏற்றுமதியாளா்கள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் பாா்சல்களின் விவரங்களைத் தாங்களே எளிமையான முறையில் ஆன்லைனில் உள்ளீடு செய்த பின், தூத்துக்குடி தலைமை அஞ்சலகம் மூலமாக பாா்சல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். மேலும் புக்கிங் குறித்த விவரங்களை ஆன்லைனிலேயே ஊா்ழ்ங்ண்ஞ்ய் டா்ள்ற் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கும் வசதியும் இதில் அடங்கும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பாா்சல்கள் அனுப்பும் இந்த சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வணிக நிா்வாக அலுவலரை 98418 75710 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.