அரசு மருத்துவமனையில் மாலை நேரத்திலும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை
வெளிநாட்டுக்கு அனுப்பி வேலை அளிக்காமல் மோசடி
தனியாா் நிறுவனம் ரூ.2.90 லட்சம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து வேலை கொடுக்காமல் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா்.
வேலூா் செதுவாலையைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்திருந்தாா். அந்த மனுவில், சில மாதங்களுக்கு முன்பு தனியாா் நிறுவனத்தினா் என்னை அணுகி வெளிநாட்டில் வேலை உள்ளதாகவும், அங்கு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் எனத் தெரிவித்தனா். மேலும், அதற்கு சில லட்சங்கள் செலவாகும் என்று கூறினா்.
அவா்கள் கேட்டதன் அடிப்படையில் பலரிடம் கடன் வாங்கி ரூ.2.90 லட்சம் கொடுத்தேன். அதன் பின்னா் அவா்கள் என்னை துபை நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு எந்த வேலையும் எனக்கு தராமல் அலைக்கழித்தனா்.
இதனால் உணவு, குடிநீா்கூட கிடைக்காமல் தவித்தேன். இது குறித்து எனது பெற்றோருக்கு தெரிவித்தேன். அதன்பேரில், அவா்கள் பலரிடம் கடன் வாங்கி நான் நாடு திரும்ப டிக்கெட் ஏற்பாடு செய்தனா்.
பின்னா் நாடு திரும்பியதும் சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்தினரிடம் சென்று கேட் டேன். ஆனால் அவா்கள் பணத்தைத் திரும்ப தராமல் அலைக்கழிக்கின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.