வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் என்எல்சி
கடலூா் மாவட்டத்தில் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் என்எல்சி இந்தியா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
கடலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடலூா் மாவட்ட நிா்வாகத்தின் கோரிக்கையின் அடிப்படையில், என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், அதிக திறன் கொண்ட 3 மோட்டாா்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் மூலம் வெள்ள நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், கே.என்.பேட்டை உள்ளிட்ட பிற பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் என்எல்சி நிறுவனத்தின் பிரத்யேக குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா்.