செய்திகள் :

வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு: ட்ரம்ப் Safe; பதில் தாக்குதலில் குற்றவாளி இறப்பு

post image

சரியாக ஒரு மாத இடைவெளிக்குள், அமெரிக்காவில் கவனிக்கத்தக்க இன்னொரு துப்பாக்கிச் சூடு நிகழ்வு நடந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 25-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டன்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அங்கே திடீரென ஆலன் என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்த ட்ரம்ப் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

ஒரே ஒரு பாதுகாப்பு அதிகாரி மட்டும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தார். ஆனால், அவரும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததால், அவருடைய உயிருக்கு ஆபத்தில்லாமல் இருந்தது.

நசீர் பெஸ்ட்
நசீர் பெஸ்ட்

இந்தச் சம்பவத்தின் சுவடுகள் அடங்குவதற்குள்ளே, அமெரிக்காவில் இன்னொரு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அதுவும் வெள்ளை மாளிகையில்.

நேற்று மாலை (அமெரிக்க நேரப்படி), ஒருவர் வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள செக் பாயிண்டிற்கு வந்துள்ளார்.

அவர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

பதிலுக்கு அவர் மீது பாதுகாப்பு அதிகாரிகளும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த குற்றவாளியை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ஆனால், சிகிச்சைக்குப் பலனில்லாமல் இறந்துவிட்டார்.

இவர் பெயர் நசீர் பெஸ்ட் (வயது 21) என்று அறியப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகைக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்துள்ளார். அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்த போது, ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தான் இருந்திருக்கிறார். அவர் பாதுகாப்புடனும், நலமுடனும் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

'புகாரை வாபஸ் பெற முடியாது' - பிடிவாத எடப்பாடி; டென்ஷனில் எம்எல்ஏ-க்கள்; தவெக-வின் திட்டம் என்ன?

அ.தி.மு.க-வைச் சேர்ந்த வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் குழுவினர், கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவரது உத்தரவையும் மீறி, சட்ட... மேலும் பார்க்க

கோவை சிறுமி கொலை: "ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை" – தவெக அரசு மீது எஸ்.பி. வேலுமணி விமர்சனம்

கோவையில் 10 வயது சிறுமி படுகொலை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், “கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சார்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ம் தேதின... மேலும் பார்க்க

கோவை சிறுமி கொலை: "குற்றப்பத்திரிகையை உடனடியாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்" - முதல்வர் விஜய்

கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழக முத... மேலும் பார்க்க

கோவை சிறுமி கொலை: "ரீலிஸ் அரசாக இல்லாமல் ரியல் அரசாகவும் இருக்க வேண்டும்" - இபிஎஸ் கண்டனம்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் கார்த்தி, மோகன்ராஜ் ... மேலும் பார்க்க

திருவாரூர்: வாய்க்காலில் கவிழ்ந்த அரசு பேருந்து — பத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

திருவாரூரில் இருந்து உலகப் பிரசித்தி பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் நகரப் பேருந்தானது இன்று காலை வழக்கம்போல் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தை... மேலும் பார்க்க

தவெக-வுக்கு ஆதரவு: ``ஸ்டாலினின் இசைவோடுதான் ஆதரவு" - விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்தது தொடர்பாக சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு, விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்திருக்கிறார். அவரின் பேட்டிய... மேலும் பார்க்க