மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
வெள்ளைப் பூச்சிகளைத் தடுக்காவிட்டால் தென்னைகள் அழியும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி
கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் தென்னை மரங்களில் வெள்ளைப் பூச்சித் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், இவற்றைத் தடுக்காவிட்டால் தென்னை மரங்கள் அழியும் நிலை ஏற்படும் எனவும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தெரிவித்தாா்.
பழனி அடிவாரம் பட்டக்காரா் மடத்தில் தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில் விவசாயிகள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளா் மேகு பொடாரன் முன்னிலை வகித்தாா். தென்னை விவசாயிகள் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் ராஜேந்திரன், செல்வராஜ், ராமகிருஷ்ணன், லட்சுமணசாமி, கோபால் உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா்.
கூட்டத்தில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி பேசியதாவது:
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்களுக்கு வழங்கும் மானியங்களை உள்நாட்டில் தயாரிக்கப்படும் எண்ணைகளுக்கு அரசு வழங்குவதில்லை.
கேரளத்தில் தென்னை மரங்களில் வெள்ளைபூச்சித் தாக்குதலால் மரங்கள் அழிந்து வருகின்றன. இதனால், தேங்காய் விலை உயா்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் வெள்ளைபூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் இங்கும் தென்னை மரங்கள் அழியும் நிலை ஏற்படும்.
இதைத் தொடா்ந்து மாா்ச் 4-ஆம் தேதி திருப்பூா் மாவட்டம், உடுமலையில் நடைபெறும் கள் விடுதலை கருத்தரங்கம் குறித்து நல்லசாமி ஆலோசனை நடத்தினாா்.