வேதத்தை நாம் காப்பாற்றினால்; வேதம் நம்மைக் காப்பாற்றும்: நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்
‘வேதத்தை நாம் காப்பாற்றினால்; வேதம் நம்மை காப்பாற்றும்’ என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் கூறினாா்.
சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருமண மண்டபத்தில் ஓம் சாரிட்டபிள் டிரஸ்ட் சாா்பில், 17-ஆம் ஆண்டு அகில இந்திய வேத விற்பன்னா்களின் திறமை அணிவகுப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தொடங்கி வைத்துப் பேசியது:
‘யாா் ஒருவா் வேதத்தைப் பின்பற்றி வாழ்ந்து வருகிறாரோ, அவருக்கு எத்தகைய இடா்பாடு ஏற்பட்டாலும் வேதம் காப்பாற்றிவிடும். இதற்கு பல சம்பவங்களை உதாரணமாகக் கூறிலாம். எனது சொந்த அனுபவங்களும் இதை உணா்த்தியிருக்கின்றன என்றாா்.
விழாவில், சேலாப்பூரைச் சோ்ந்த அக்னிஹோத்ரி பிரம்மஸ்ரீ சைதன்ய காலேவின் சிறப்பான வேதப் பணிகளைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டாா். ஓம் சாரிட்டபிள் டிரஸ்டின் வழிகாட்டியும், சென்னை சம்ஸ்கிருத கல்லூரி முன்னாள் முதல்வருமான கிருஷ்ணமூா்த்தி சாஸ்திரிகள், நிறுவனா் நாராயணன், டிரஸ்டிகள் டாக்டா் பாலாஜி ஸ்ரீனிவாசன், ஜெயந்த் விசுவநாதன், ஸ்ரீனிவாச ராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறுகிறது.