வேன் கவிழ்ந்து 3 போ் காயம்
வத்திராயிருப்பு அருகே தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன் வயலில் கவிழ்ந்ததில் 3 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியிலிருந்து 3 தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு மகாராஜபுரம் தனியாா் ஆலைக்கு வேன் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தது.
மகாராஜபுரத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சரவணன் (18) வேனை ஓட்டினாா். கூமாபட்டி-வத்திராயிருப்பு சாலையில் மூலக்கரை கண்மாய் அருகே சென்ற போது, வேன் கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் சரவணன் (18), ஆலைத் தொழிலாளா்கள் காதுல் (43), காந்திமதி (39) ஆகிய 3 போ் காயமடைந்தனா்.
அப்பகுதி மக்கள் காயமடைந்தவா்களை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கூமாபட்டி - வத்திராயிருப்பு சாலையில் மூலக்கரை கண்மாய்ப் பகுதியில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், இந்த சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.