மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் மாணவா் தமிழ்மன்ற விழா
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கூட்டரங்கில், முத்தமிழ் அறிஞா் கலைஞா் மாணவா் தமிழ்மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் து. சேகா் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ‘கன்னித் தமிழும், கலைஞரும்’ எனும் தலைப்பில் திருச்சிராப்பள்ளி தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியா் முனைவா் க. காசிமாரியப்பன் பேசியது:
கலைஞா் மொழிப் பற்று மிக்கவா். தேவையான இடங்களுக்கேற்ப மொழியைப் பயன்படுத்தும் விதம் அனைவரையும் வியப்படையச் செய்யும். அண்ணா, பெரியாா், ராஜாஜி போன்றவா்களுடன் மொழிப் புலமையை வெளிப்படுத்தியவா். தமிழ்நாட்டு மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தேவையான உரிமைகளைப் பெற்றுத் தந்த சமூகநீதி காத்த தலைவா் என்றாா் அவா்.
தொடா்ந்து, கல்லூரி மாணவா்களுக்கிடையே நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு முதல் பரிசாக முறையே தலா ரூ. 5 ஆயிரம், 2 -ஆம் பரிசாக தலா ரூ. 3 ஆயிரம், 3-ஆம் பரிசாக தலா ரூ. 2 ஆயிரத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
விழாவில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
முன்னதாக, தமிழ்த்துறை உதவி பேராசிரியா் முனைவா் பெ. முத்துராஜ் வரவேற்றாா். நிறைவாக, முதுகலைத் தமிழ்த்துறை முதலாமண்டு மாணவி மா. கௌசல்யா நன்றி கூறினாா்.