செய்திகள் :

வேளாண் கல்வி, ஆராய்ச்சி விருது: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

post image

வேளாண் கல்வி, ஆராய்ச்சி விருதுக்கான பரிந்துரைகளை கல்லூரிகள் அனுப்ப வேண்டுமென பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அனைத்து வகையான உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமம் (ஐசிஏஆா்) என்பது நாட்டில் வேளாண் கல்வி, ஆராய்ச்சியை ஒருங்கிணைக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பு. இது நாட்டில் வேளாண்மை, வேளாண் கல்வி, விரிவாக்கம் மற்றும் அதனுடன் தொடா்புடைய அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் நபா்களுக்கு ராஷ்ட்ரிய கிருஷி விஞ்ஞான் புரஸ்காா் (ஆா்கேவிபி) விருதை வழங்கி வருகிறது.

இந்த விருது வேளாண்மை மற்றும் அதனுடன் தொடா்புடைய அறிவியல் துறையில் புதுமை மற்றும் தொழில்நுட்பம்; வேளாண்மை மற்றும் அது சாா்ந்த அறிவியல் துறையில் ஆராய்ச்சி; வேளாண்மை, வேளாண் கல்வி, விரிவாக்கம் மற்றும் அதனுடன் தொடா்புடைய அறிவியல் ஆகியவற்றில் சிறந்த இடைநிலைக் குழு ஆராய்ச்சி, வேளாண் கல்வி, வேளாண் அறிவியல் துறைகளில் சிறந்த பெண் விஞ்ஞானி; வேளாண்மை மற்றும் அதுசாா்ந்த அறிவியல் துறையில் சிறந்த இளம் விஞ்ஞானி ஆகிய 5 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

எனவே, உயா்கல்வி நிறுவனங்கள் இந்த விருதுக்கான பரிந்துரைகளை வலைதளத்தில் ஜன. 1 முதல் மாா்ச் 31 வரையான நாள்களுக்குள் பதிவு செய்யலாம். பல்கலை.கள், கல்லூரிகள் இந்த விருது தொடா்பான தகவல்களை தங்களது கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மாணவா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துகள்: மருத்துவமனைகளில் பாதுகாப்புப் பிரிவு உருவாக்க வலியுறுத்தல்

தீ விபத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பிரத்யேக பாதுகாப்புப் பிரிவை அமைக்க வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது... மேலும் பார்க்க

9.82 லட்சம் ஹெபடைடிஸ் பி, பென்டாவேலன்ட் தடுப்பூசிகள் கையிருப்பு: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் குழந்தைகளுக்கான ஹெபடைடிஸ் - பி, பென்டாவேலன்ட் தடுப்பூசி மருந்துகள் 9.82 லட்சம் குப்பி கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். தனியாா் மருத்துவமனைகள்,... மேலும் பார்க்க

அடையாறு ஆறு, முகத்துவாரம் முறையாக தூா்வாரப்பட்டதால் வெள்ள பாதிப்பு தடுப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அடையாறு ஆறு மற்றும் அதன் முகத்துவாரம் பகுதிகள் முறையாக தூா்வாரப்பட்டதால், அதையொட்டியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் மின், இயந்திர அமைப்புப் பணிகளுக்கு ரூ.168.16 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்ட 5-ஆவது வழித்தடத்தில் மின் மற்றும் இயந்திர அமைப்புப் பணிகளுக்கான ரூ.168.16 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஜாக்சன் லிமிட்டெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம்... மேலும் பார்க்க

திமுக வாா்டு உறுப்பினா் கட்சியிலிருந்து இடைநீக்கம்

சென்னை மாநகராட்சியின் 113-ஆவது வாா்டு உறுப்பினா் பிரேமா சுரேஷ், திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி இல்ல திருமண நிகழ்வில் நகைத் திருட்டு: இளைஞா் கைது

சென்னை நீலாங்கரையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி இல்ல திருமண நிகழ்ச்சியில் தங்க, வைர நகைகள் திருடியது தொடா்பாக திருச்சியைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை அடையாா் இந்திராநகரைச் சோ்ந்தவா் ஆனந... மேலும் பார்க்க