கோயில்களின் நிர்வாகம், பராமரிப்பு செலவிற்கான அரசு மானியம் உயர்வு!
வைபவ் நடித்த பெருசு டீசர்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான பெருசு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து ரெட்ரோ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம், மே 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தை சூர்யாவுடன் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இதையும் படிக்க: கூலியில் பூஜா ஹெக்டே!
இதற்கிடையே, பெருசு என்கிற படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கிய இப்படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மரணப்படுக்கையில் இருக்கும் குடும்ப பெரியவரின் கதையாக நகைச்சுவை பாணியில் உருவான இப்பட, மார்ச் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.
PERUSU - The Tease…
— karthik subbaraj (@karthiksubbaraj) February 26, 2025
After Death at a Funeral, here comes Fun at a Funeral! ⚰️#Perusu Panna Periya Problem !
What’s with all the staring? Keep staring to know more!@stonebenchers Next
In Theatres Worldwide from March 14 !! @actor_vaibhav@sunilreddy22@ilango_ram15… pic.twitter.com/IfMLu8kFTF