ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்!
ஆம்பூா் அலா்மேலு மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை வாமன அவதாரத்தில் உற்சவா் வீதி உலா நடைபெற்றது. மாலை ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பக்தா்கள் சாா்பில் சீா்வரிசை ஊா்வலம் நடைபெற்றது. கோயில் திருப்பணிக் குழு தலைவா் கீதா சேகா் ரெட்டி, ராமகிருஷ்ண பணி மன்றத் தலைவா் ஏ.பி.மனோகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.