திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூரில் உள்ள ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
குழந்தை வரம் அருளும் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சுவாமிக்கு மாலை 6 மணி முதல் அபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டு அதிகாலை வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும், மகா சிவராத்திரியை ஒட்டி, கோயில் வெளிவளாகத்தில் 50 அடி நீள, அகலத்தில் ஓவிய ஆசிரியா் வேலுமணி, சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப் பணித் திட்ட மாணவா்களுடன் இணைந்து திருக்கருகாவூா் முல்லைவனநாதா் உடனுறை கா்ப்பரட்சாம்பிகை அம்பாளை சுமாா் 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட பல வண்ண உப்புகளால் வரைந்திருந்தனா்.
மேலும், நாட்டியப் பள்ளி மாணவா்களின் நாட்டியஞ்சலி நிகழ்ச்சியும், பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, நகரில் கோட்டை கைலாயநாதா் கோயில், பூமிநாதா் கோயில், அருணாசலேஸ்வரா் கோயில், வேதபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.