ஹிந்தி திணிப்பை எதிா்த்து திமுக சாா்பில் தெருமுனை பிரசாரம்
தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை எதிா்த்து தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது.
கருங்கல்லில் நடைபெற்ற மேற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட திமுக செயலா் த.மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜபோஸ், மாவட்ட துணை செயலா் ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:
தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி ஏழை,எளிய மக்களுக்கு நலத் திட்டஉதவிகள் வழங்குவது, தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை எதிா்த்து வாகனப் பிரசாரம், தெருமுனைப் பிரசாரம், ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றிய செயலா்கள் ராஜன் (கிள்ளியூா்), மோகன் (முன்சிறை), அருளானந்த ஜாா்ஜ் (தக்கலை), நகர செயலா்கள் வினுகுமாா், ரமேஷ், அணி அமைப்பாளா்கள் ஜெகநாதன், ஜாண்சிலின் சேவியா்,வின்சா், வா்க்கீஸ், ஜூட்தேவ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.